Headlines News :
அன்புள்ள சகோதர்களே!இவ் இணையத்தளத்தை நீங்கள் பார்ப்பதோடு ஏனயோர்களுக்கும் எத்திவைக்கவும்.அதே போன்று உங்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் mnajeeblk@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். ”உங்களது மின்னஞ்சல் முகவரியில் இத்தளத்தின் கட்டுரைகளை பெற்றுக் கொள்ள மின்னஞ்சல் மூலம் சந்தாதாராகுக.
Home » » குர்ஆனுக்கும் ஏனைய வேதங்களுக்குமுரிய வேறுபாடுகள்

குர்ஆனுக்கும் ஏனைய வேதங்களுக்குமுரிய வேறுபாடுகள்

Written By islamipc on Friday, July 27, 2012 | 7:44 PM


குர்ஆனுக்கு இதுவரை இரண்டு இலட்சம் விரிவுரை நூல்கள் வந்துள்ளன. எத்தனை நு{ல்கள் வந்த போதினும் குர்ஆனை முழுமையாக மொழி பெயர்க்கவோ, அதற்கு சரியான விரிவுரை எழுதவோ முடியாது.




இன்று நாம் படிக்கும் மொழிபெயர்ப்பு குர்ஆனின் முழுமொழி பெயர்ப்பல்ல. இன்னும் ஆழமான விரிவான பொருள் அதற்குண்டு என்ற நினைவோடு நாம் அதைப் படிக்கவேண்டும்.
ஒரு சொல்லுக்குப் பல பொருள்களும், பலபொருளை உள்ளடக்கிய பல சொற்களும் குர்ஆனில் ஏராளம் உள்ளன.
தேனுக்கு 40 சொற்களும், பாம்புக்கு 200 சொற்களும், சிங்கத்திற்கு 630 சொற்களும், ஒட்டகத்திற்கு  1000 சொற்களும்,  வாளுக்கு  1000 சொற்களும், 3 பொருள்ள சொற்கள் 300 ம்,  நான்கு  பொருளுள்ள சொற்கள் 400 ம், 20 பொருளுள்ள  சொற்கள் 200 ம்  அரபு மொழியில் மலிந்து கிடப்பதைக்  காணலாம்.
இதிலிருந்தே குர்ஆனிய அரபு மொழி வளமைமிக்க மொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

புலமைமிக்க தஃப்ஸீர் கலை மேதைகள் அவற்றின் பொருட் செறிவையும், விரிந்து நிற்கும் விளக்கத்தையும், அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணியையும் தெரிந்திருந்தாலும் “ எதையும் இது தான் அதன் பொருள் என அறுதியிட்டுக் கூறமுடியாது. அவை உலக முடிவு நாள் வரையுள்’ள அனைத்துச் செய்தி களையும் உள்ளடக்கி யதையும், அந்தந்த காலத்திற்கேற்ப உணர்த்துவதையும் காணலாம்.

அதன் விரிவான பொருள் விண்ணைவிட விரிவானது. கடலைவிட ஆழமானது என்பதை இமாம் பூஸிரி (ரஹ்) அவர்கள் கூறுவதைப் படியுங்கள்.
அதன் நடை அழகிலும்,.கருத்தாழத்திலும் முத்துக்களைவிட மேலானது.  கருத்துக்களோ கடல் அலையைப் போன்று விரிந்து கொண்டே போகும்.

لها معات كموج  البحــرفي
مدد  + وفوق جوهره في الحسن والقيــم

குர்ஆனுக்கும்
ஏனைய வேதங்களுக்குமுரிய வேறுபாடுகள்:-
  1. குர்ஆன் அதன் மூலமொழியிலேயே ஓதப்படுகிறது. ஏனையை வேதங்களை மூலமொழியின்றி அதன் மொழிபெயர்ப்பையே படிக்கிறார்கள்.
உ-ம்
  1. மோஸஸின் ஓல்டு டெஸ்டு மென்ட் (பழைய ஏற்பாடு) ஏபிரேய மொழி ( ஹீப்ரு – கிரேக்க மொழியில் உள்ளது.
  2. இயேசுவின் நியூ டெஸ்டுமென்ட் அராமிக் மொழியலுள்ளது.
  3. பாரசீகர்களின் ஜெந்த அவஸ்தா பாரசீக மொழியிலுள்ளது.
  4. பிராமணர்களின் ரிக்,யஜுர்,சாமம்,அதர்வணம்  வேதங்கள் சமஸ்கிருத மொழியிலுள்ளது.
  5. புத்தர்களின் “ தம்மபதம்” பாலி மொழியிலுள்ளது.

2.  குர்ஆன் தூய்மையான எல்லா இடங்களிலும் ஓதப்படுகிறது. ஏனைய வேதங்கள் குறிப்பிட்ட இடங்களில்,குறிப்பிட்ட திருநாட்களில் மட்டுமே படிக்கப்படுகின்றன.

3.குர்ஆன் படித்தவர் முதல், பாமரர் வரை,குருமார் முதல், சாதாரண மனிதர் வரை ஓதப்படுகிறது. ஏனைய வேதங்கள் குருமார்களால் மட்டுமே ஓதப்படுகன்றன.

4. குர்ஆன் 24 மணிநேரமும் எல்லா நேரங்களிலும் ஓதப்படுகின்றன. ஏனைய வேதங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே படிக்கப்படுகின்றன.

5. ஏனைய வேதங்களுக்கு நேரடியான குறிப்பிட்ட பொருள்களே உள்ளன. ஆனால் குர்ஆனுக்கு அப்படியல்ல. குர்ஆனுக்கு நேரடிப் பொருள் இதுதான் என்று திட்டமாகக் கூறமுடியாது. அதற்கு விரிந்த பல பொருள்களும் உள்ளன. அதளால் தான் குர்ஆனின் முகப்பிலேயே தர்ஜுமத்து மஆனில் குர்ஆன் “குர்ஆன் மொழிபெயர்ப்பின் கருத்துரை”என எழுதப்பட்டிருக்கும்

6. ஏனைய வேதங்களுக்கு விளக்கவுரைகள் கிடையாது.ஆனால் குர்ஆனுக்கு இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தஃப்ஸீர்கள் விரிவுரைகள் உள்ளன.

7. குர்ஆனின் விளக்கவுரையைப் படித்தே உலகோர் வியக்கின்றனர். ஆனால் (டெக்ஸ்) மூலமொழியைக் கற்றாலோ ?

8. விரிவுரையைப் படித்தே பலரும் இஸ்லாத்தில் இணைந்த வண்ணமுள்ளனர்.

9. ஏனைய வேதங்கள்   உரை நடையாகவோ, கவிதையாகவோ, பாடல்களாகவோ, இசையாகவோ உள்ளன. குர்ஆன் உரைநடை யுமல்ல. கவிதை நடையுமல்ல.இரண்டும் கலந்தவை. உரை நடையிலும்.மேலான உயர் நடை. கவிதையிலும் மேலான கவின் நடை.இதனால் தான் It is the greatest literature in the world என உலகோரால் போற்றப்படுகிறது.
தொடரும்….
Share this article :

0 கருத்துரைகள்:

அதிகம் பார்வையிட்டது

நபிமொழி அறிவோம்!

“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாமிய நாட்காட்டி


மொத்தப் பார்வையாளர்கள்

 
Support : Creating IPC | Nof | Maruthamunai
Proudly powered by IPC
Copyright © 2011. தௌஹீத் - All Rights Reserved
Template Design by Mohamed Najeeb Published by NOF