Headlines News :
அன்புள்ள சகோதர்களே!இவ் இணையத்தளத்தை நீங்கள் பார்ப்பதோடு ஏனயோர்களுக்கும் எத்திவைக்கவும்.அதே போன்று உங்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் mnajeeblk@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். ”உங்களது மின்னஞ்சல் முகவரியில் இத்தளத்தின் கட்டுரைகளை பெற்றுக் கொள்ள மின்னஞ்சல் மூலம் சந்தாதாராகுக.

ரமளானே வருக !

Written By islamipc on Monday, June 25, 2012 | 9:34 PM


ரமளான் சிந்தனை-1       நாளை ரமளான்!
ரமளானை வரவேற்போம்
மர்ஹபன் அஹ்லன் வஸஹ்லன் பிஸ்ஸியாம்! ரமளானே உன்னை வாழ்த்தி வரவேற்கிறோம்.
ரமளானின் வருகையை இஸ்லாமிய உலகமே வற்றாத உவகையுடன் வரவேற்றுச் சிறப்பிக்க வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தது. இதோ அந்த ரமளானும் வந்துவிட்டது. !
நாளை முதல் ரமளான்!
ரமளான் அருள் பொழியும் ஒரு மகத்தான மாதம். கருணைமிக்க அல்லாஹ் தனது அடியார்களுக்கு தனது அருள் மாரியைப் பொழியவும், பாவங்களை மன்னித்தருளவும், தஆக்களை ஏற்றுக் கொள்ளவும் சித்தமாக உள்ளான்.
ஆகவே, அவன் அருளைப் பெறத்துடிப்போர் யார்? அவனது மன்னிப்பை வேண்டுவோர் யார் ? என்பதை அல்லாஹ் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறான்.
வானவர்களும் ” நன்மையைப் பெறத்துடிப்போரே! உங்களுக்கு சுபசோபனம் உண்டாவதாக! என வாழ்த்திக்கொண்டிருப்பர். தீமைசெய்வோரை அவற்றை நிறுத்திக் கொள்ளுங்கள்”  என்று கூறிக்கொண்டிருப்பர்”.
நல்லோர் அல்லாஹ்வின் அருளைப்பெற முனைப்பாக இருப்பர். ஆனால் தீயோர் இறையருளைப்பற்றிய கவலையே இல்லாது அவற்றில் அலட்சியம் காட்டுவர்.
நன்மைகளை அபரிமிதமாகச்செய்யவும், தானதர்மங்களை வாரி வழங்கவும் உரிய அற்புதத் திங்களாக விளங்கும் ரமளான் பாக்கியம் நிறைந்த அரிய மதாமாகும்.
“ரமளானின் முதலிரவு தோன்றிவிட்டால் சுவர்க்கத்தின் வாயிலகள் திறக்கப்படுகின்றன.நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். (புகாரி,முஸ்லிம்)
மதாங்களின் சிகரமாக விளங்கும் ரமளானின் ஒவ்வொரு நாளும் அற்புதத் திரு நாளாகும்.”அந்த மாதத்தை அடைந்தும் யார் இறைவனின் மன்னிபபை(யும் அருளையும்) பெறவில்லையோ அவருக்கு இறைவனின் சாபம் உண்டாவதாக என ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறினார்கள் என்றால் அம்மாதத்தைப் பயன்படுத்தாதோரைவிட துர்பாக்கியவான் வேறு யாராக  இருக்க முடியும்?
ஒரு நன்மைக்கு பத்து முதல் எழுநூறுவைரை ஏன் அதைவிடவும் பலமடங்குகள் அதிகமாகக் கூலி வழங்கப்படும் இந்த புனித மாதத்தின் நன்மைகளை எவரும் இழந்துவிடவேண்டாம். ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் மகத்தானது. மாண்புடையது.
சென்ற வருடம் நம்மோடிருந்தோர் பலர் இன்று நம்முடன் இல்லை. அடுத்தஆண்டும் நாம் உயிர்வாழந்து இந்தரமளானின் பாக்கியங் களை பெறுவோமா ? என்பதற்கு எந்தஉத்தர வாதமும் இல்லை. எனவே இருக்கும் இந்த ரமளான் மாதத்தை மகத்தனதாக ஆக்கிக் கொளவோமாக!
இந்த ரமளானில் சபதமேற்போம்!
குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுவோம்.
அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோம்!
தான தர்மங்களை வாரி வழங்குவோம்.
உற்றார் உறவிரை தழுவி நிற்போம்
அண்டை அயலார் நலம் பேணுவோம்.
ஏழை எளியோரின் பசி போக்குவோம்.
கல்வி கற்கத் துணைநிற்போம்.
சமுதயம் சிறக்கப் பாடுபடுவோம்.
வல்ல ரஹமான் நம் நல் அமல் களையும், அரிய துஆக்களையும் ஏற்றருள்வானாக!
அன்புடன் உங்கள் சகோதரன்
பாக்கவி
ரமளான் சிந்தனை தொடரும்….
Share this article :

0 கருத்துரைகள்:

அதிகம் பார்வையிட்டது

நபிமொழி அறிவோம்!

“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாமிய நாட்காட்டி


மொத்தப் பார்வையாளர்கள்

 
Support : Creating IPC | Nof | Maruthamunai
Proudly powered by IPC
Copyright © 2011. தௌஹீத் - All Rights Reserved
Template Design by Mohamed Najeeb Published by NOF